ஜனாதிபதி வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சியினால் நியமிக்கப்படவேண்டியவர், கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவே ஆவார்.
அது தொடர்பில் வலியுறுத்தும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு பிரிவினர், கையொப்பம் திரட்டி வருகின்றனர்.
அதில் கையொப்பமிடுமாறு இராஜாங்க அமைச்சர் இருவர், கடுமையாக அச்சுறுத்தி வருவதாக, கையொப்பமிடாத சில எம்.பிக்கள், இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் முறையிட்டுள்ளனர்.
அதில் கையொப்பமிடாவிடின், அடுத்த பொதுத் தேர்தலில் வேட்புமனு வழங்கப்படமாட்டு என, அந்த இரண்டு இராஜாங்க அமைச்சரும் கடுமையாக அச்சுறுத்துகின்றனர் என, பிரதமரிடம் செய்யப்பட்டுள்ள அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது தெரிவிக்கப்படுகின்றது.
அவ்விரு இராஜாங்க அமைச்சர்களுக்கு எதிராக, விரைவில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.