பாராளுமன்றத்தில் வெற்றிடமாக இருக்கும் குருநாகல் பாராளுமன்ற உறுப்பினரின் பதவி வெற்றிடம் இன்னும் நிரப்பப்படாத நிலையில், மற்றுமொரு எம்.பிக்கான பதவி வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.
மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்திரசிறி கஜதீர, வெள்ளிக்கிழமை மாலை மரணமடைந்தார். அவருடைய எம்.பி பதவியும் வெற்றிடமாகியுள்ளது.
இந்த இரண்டு வெற்றிடங்களையும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஊடாகவே நிரப்பவேண்டும். ஏனெனில், அவ்விருவரும் கடந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு தெரிவுச்செய்யப்பட்டவர்கள் ஆவார்.
இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவதான செலுத்தியுள்ளார்.
2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி, மாத்தறை மாவட்டத்தில் ஐந்து உறுப்பினர்களை வெற்றிக்கொண்டது. அதில், விருப்பு வாக்குப் பட்டியலில், 54,252 வாக்குகளைப் பெற்று, சந்திரசிறி கஜதீர 5ஆவது இடத்தில் இருந்தார்.
விருப்பு வாக்கின் பட்டிலில் அடுத்ததாக, 48,590வாக்குகளை பெற்றிருந்தவர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன ஆவார்.
அவர், பொதுத் தேர்தலில் தோல்வியை தழுவியிருந்தாலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக அவர் நியமிக்கப்பட்டார்.
அதடிப்படையில் பட்டியில் அடுத்ததாக, 28,723 வாக்குகளை மனோஜ் சிறிசேன என்பவரே பெற்றுள்ளார்.
அவர், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.
எனினும், அவருக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஊடாக, பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படவுள்ளது.
அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவுடன், ஸ்ரீ லங்கா சுந்திரக் கட்சியில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடர்வதாக உறுதியளித்துள்ளார்.
அதனடிப்படையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர, மனோஜ் சிறிசேனவின் பெயரை, தேர்தல்கள் செயலகத்துக்கு அனுப்பிவைக்க உள்ளார் என அறியமுடிகின்றது.