நாட்டின் ஆட்சியை இரவோடு இரவில் கைப்பற்றுவதற்கான சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என சமுக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
அதனை நோக்கமாகக் கொண்டே, ஸ்ரீ லங்கா ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை, அரச பாதுகாப்பு அமைச்சின் கீழ், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொண்டுவந்தார் என அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2002ஆம் ஆண்டு, ரணில் விக்கிரமசிங்க பிரதமராகவும், ஜனாதிபதியாக சந்திரிக்காவும் ஆட்சியிலிருந்த போது, ரணில் தரப்பிடமிருந்த ஊடகத்துறை அமைச்சை, தன்னுடைய நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி சந்திரிக்கா, ஊடகத்துறை அமைச்சை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.
அதன்பின்னர், ரணிலின் ஆட்சி ஆடங்கண்டதுடன், பொதுத் தேர்தலுக்குச் செல்லவேண்டிய நிலைமை ஏற்பட்டமையும் தெரிந்ததே.
முந்திய செய்தி
ஸ்ரீ லங்கா ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை, அரச பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவந்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
அரச பாதுகாப்பு அமைச்சின் ஜனாதிபதி வசமே உள்ளது. அதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல், இன்றிரவு வெளியானது.
ஸ்ரீ லங்கா ரூபவாஹினி கூட்டுத்தாபனம் அதன் நிர்வாகம் தொடர்பில் கடந்த காலங்களில் கடுமையான பிரச்சினைகள் ஏற்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய நிதியமைச்சர் மங்கள சமரவீர, ஊடகத்துறை அமைச்சராக இருந்த போது, ஸ்ரீ லங்கா ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவராக இனோகா சத்யங்கனி பதவிவகித்தார்.
ஊடகத்துறை அமைச்சராக ருவன் விஜயவர்தன நியமிக்கப்பட்டபோது, இனோகா சத்யங்கனியை அப்பதவியிலிருந்து நீக்கினார். இதனால் நிர்வாக முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.