ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை.
இந்நிலையில், ஜனாதிபதி வேட்பாளராக அக்கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவை நியமிக்குமாறு வலியுறுத்தப்பட்டுவருகின்றது.
”சஜித் வருகிறார்” எனும் தலைப்பில் பிரதான நகரங்களில் கூட்டங்களும் நடத்தப்படுகின்றன.
இது இவ்வாறிருக்க, சஜித் பிரேமதாஸ பல்வேறு தரப்புகளுடன் சந்திப்புகளில் ஈடுபட்டு வருகின்றார்.
அதனடிப்படையில ஜாதிக ஹெல உறுமயவுடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
அந்த பேச்சுவார்த்தையில் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவை பிரதமர் வேட்பாளராக நியமிப்பது என்பது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி வேட்பாளராக சஜித்தை களமிறக்கவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அந்த சந்திப்பில் ஆரம்ப இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதுடன், புதிய கூட்டணியை அமைப்பது குறித்தும் தீர்மானிக்க்பட்டுள்ளது.
சஜித்துக்கு மிகவும் வேண்டிய குழுவினரே இந்த புதிய கூட்டணியை அமைக்கவுள்ளனர்.
அந்த புதியக் கூட்டணியில் ஹக்கீம், ரிஷாட், மனோ கணேசன், இராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்களையும் இணைத்துக்கொள்வதற்கான ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதுமட்டுமன்றின் ஜே.வி.பியுடனும் பேச்சு நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஏனை தரப்பினர், சுத்திரக் கட்சியின் மாற்று அணியினர், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அதிருப்தியாளர்கள் ஆகியோருடனும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சஜித் அணியினர் ஏற்பாடு செய்துள்ளனர் என்றும் அந்த தகவல்களில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.