சிங்களத்தில் தாத்தே என்றால் என்றால் ஆங்கிலத்தில் பாதர் என்றழைப்பர், தமிழில் அப்பா என்றே அர்த்தப்படும்.
ஆனால், தாத்தா என்றால், தமிழில் பாட்டன் என்றழைக்கப்படுவர்
அதன் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதியும் எதிர்கட்சித் தலைவரும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ, தாத்தாவாக போகிறார்.
மஹிந்த-ஷிரந்தியின் கடைசி புதல்வர் ரோஹித ராஜபக்ஷ, வட்டியான தம்பதிகள் பெற்றோர் ஆகப் போகின்றனர். அது தொடர்பிலான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் உலாவுகின்றன.
அருகில், எதிர்வரும் நவம்பர் மாதம் திருமண பந்தத்தில் இணையவுள்ள பாராளுமன்ற உறுப்பினரும், மஹிந்தவின் மூத்த புதல்வருமான நாமல் ராஜபக்ஷவும் இருகின்றார்.
ரோஹித ராஜபக்ஷ, வட்டியான தம்பதிகள், ஜனவரி 25ஆம் திகதியன்று திருமண பந்தத்தில் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.