அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தலை வெ ளியிட்டு அவ்வப்போது சிக்கிக்கொள்ளும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை, பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவந்தமையால் கடும் நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ளார்.
ஜனாதிபதியின் இந்த செயற்பாட்டை, ஊடகத்துறை அமைச்சர் ருவன் விஜயவர்தன கடுமையாக கண்டித்துள்ளார். ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் ஏற்படும் நட்டத்தை குறைக்கும் வகையில், நிர்வாகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியதை அடுத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனக்கு இடையூறு விளைவித்து வருகின்றார் என குற்றச்சாட்டியுள்ளார்.
குருவியைச் சின்னமாகக் கொண்ட இலட்ச்சினையை கொண்டிருக்கும் ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் கையை வைத்து, மைத்திரி சிக்கிக்கொண்டுள்ளார் என சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ள.
இதேவேளை. ஜனாதிபதியின் அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. என குற்றம்சாட்டியுள்ள சுதந்திர ஊடக இயக்கம். ஜனாதிபதியின் அந்த செயற்பாட்டை வன்மையாக கண்டித்துள்ளது.
தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடைபெறும் சந்தர்ப்பத்தில், இவ்வாறான செயற்பாடு, நிலைமையை மிக மோசமாக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது .
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவருவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை, சகல தனியார் தொலைக்காட்சிகளையும் இலங்கை ரூபவாஹினியின் கீழ் கொண்டுவரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.