ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாஸவை நியமிக்காதுவிடின், கட்சியின் ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பை சந்திக்கவேண்டிவரும் என கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள், எச்சரித்துள்ளனர்.
ஆகையால், சார், கட்சியின் தலைமைத்துவம் வேண்டாம், பிரதமர் பதவியும் வேண்டாம், ஜனாதிபதி வேட்பாளராக மட்டும் நியமிக்குமாறு சஜித் அணியினர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரியுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன், அலரிமாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே, மேற்கண்டவாறு பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஜனாதிபதி வேட்பாளராக நியமித்தால், கட்சியின் தலைமைத்துவம் மற்றும் பிரதமர் பதவி ஆகிய இரண்டையும் ரணில் விக்கிரமசிங்கவிடமே இருக்கவேண்டும்.
அதற்கு சஜித் பிரேமதாஸ இணக்கம் தெரிவித்துள்ளார் என்றும், பின்வரிசை எம்.பிக்கள் எடுத்துரைத்துள்ளனர் என அந்தத் தகவல்கள் தெரிவித்தன. அதேபோல, கட்சியில் எந்தவொரு பதவிகளிலும் மாற்றங்களை ஏற்படுத்த மாட்டேன் என, சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார் என்றும் அறியமுடிகின்றது.