துடுப்பு இல்லாத படகில் ஏறுவதால் நடுகடலில் தத்தளித்து கொண்டிருக்கவேண்டிதுதான் இல்லையேல் கவிழ்ந்துவிடவேண்டும். அவ்வாறானதொரு நிலைமையே ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது என ஜே.வி.பி தெரிவித்துள்ளது.
அதாவது, பச்சை யானை பாகன் இல்லாமல் பயணிக்கிறது என ஜே.வி.பியின் செயலாளர் நாயகம் டில்வின் சில்வா தெரிவித்தார்.
அதிகாரத்திலிருக்கும் அணி, அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு மீண்டும் களத்தில் குதிக்குமாயின், அதிலிருந்து நாம் விளங்கிக்கொள்வது என்னவெனில், அவ்வணி அதிகாரத்தில் இருக்கும் போதே தோல்வியை தழுவிக்கொண்டதாகும்.
காலியில் இடம்பெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
கட்சியின் தலைவர், ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவதற்கு கட்சிக்குள்ளே எதிர்ப்புகள் கிளம்பியிருக்கும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்றார்.
கட்சிக்கு கட்சிதான் போட்டியிருக்கும் ஆனால், ரணில்,சஜித்,கருவுக்கு இடையில் கட்சிக்குள்ளேயே போட்டி ஏற்பட்டுள்ளது என்றார்.
தன்னுடைய ஆட்சியின் போது, அபிவிருத்திகளை முன்னெடுத்திருந்தால், மீண்டும் அபிவிருத்தி செய்வதற்கு என்ன இருக்கிறது என்றும் வினவினார்.
அவ்வாறானவர்கள் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது, கடமைச்செய்வதற்கு அல்ல, ஜனாதிபதியாக இருப்பதற்காகவாகும் என்றும் இந்தக் கூட்டத்தின் போது டில்வின் சில்வா தெரிவித்தார்.