ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், பிரதித்தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பெறுபேறுகள் தொடர்பில் சிறு கட்சிகளுக்கு அறிவிக்கவில்லை என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிப்பெறக் கூடிய வேட்பாளர் ஒருவரையே ஐக்கிய தேசியக் கட்சி நிறுத்தவேண்டும் என, அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
சிறு கட்சிகளின் தலைவர்களுடன் முன்னெடுக்கப்படும் பேச்சுவார்த்தையின் போது எடுக்கப்படும் தீர்மானம், ஐக்கிய தேசிய முன்னணி மீண்டும் சந்திக்கும் போது, இது குறித்து பிரஸ்தாபிக்கப்படும் என, ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி, தனது வேட்பாளரை அறிவித்ததன் பின்னர், கட்சி முக்கியதர்களுடன் கலந்துரையாடி தீர்மானிக்கப்படும் என்றும் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.