ஐக்கிய தேசியக் கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பிலான சிக்கல்களுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை.
இந்நிலையில், அக்கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கமாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
பதுளையில் நேற்று (11) இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது என ஊவா மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன மற்றுமொரு தகவலை தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் விசுவாசியும், செயற்பாட்டாளருமான அவர், மைத்திரிபால சிறிசேனவினால் ஊவா மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை, போராடியேனும் பெற்றுக்கொள்ளவேண்டும்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் எதிர்பார்ப்பு பிரதமர் பதவியை அல்லது எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெற்றுக்கொள்வதற்காகும்.
ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கவே மாட்டார்.
அவ்வாறு நியமித்தால், அது கட்சியின் தலைமை பதவிக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்திவிடும்.
அந்த காய்நகர்த்தலையே பிரதமர் ரணில் விக்கிமசிங்க முன்னெடுத்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.