web log free
March 03, 2026

புலித் தங்கத்தை தேடிய 8பேர் கைது


தமிழீழ விடுலைப் புலிகளினால், குழித்தோண்டி புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒருதொகை தங்கம் மற்றும் பணத்தை தோண்டுவதற்கு முயன்றனர் என்றக் குற்றச்சாட்டின் பேரில் 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


மன்னார் மடு பிரதேசத்தில் மாவில்லு வனாந்தரத்தில், தோண்டிகொண்டிருந்த போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.


அவர்களிடமிருந்து கோல்ட் ஹைவரன் எனும் அதிசக்திவாய்ந்த ஸ்கேனர் இயந்திரமும் கைப்பற்றப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.


பரயானகுளம் விசேட அதிரடிப்படையினரே, மேற்படி சந்தேகநபர்களை கைதுசெய்துள்ளனர் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd