ஜனாதிபதியின் சகோதர்களில் ஒருவரான டட்லி சிறிசேனவுக்கும், சஜித் பிரேமதாஸவுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று கொழும்பில்இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகின்றது.
ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கான திகதி, எதிர்வரும் 30ஆம் திகதிக்குள் அறிவிக்கப்படவிருப்பதாக அறியமுடிகின்றது.
இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஆளும் ஐக்கிய தேசிய முன்னணி, ஜனாதிபதி வேட்பாளரை இன்னும் அறிவிக்கவில்லை.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, தனித்து போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.
இதற்கிடையில், பிரதமர் ரணிலுக்கும், சஜித்துக்கும் இடையிலான கருத்து மோதல்கள் இன்னும் தொடர்ந்தவாறே உள்ளன.
ஆனால், சஜித் பிரேமதாஸவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஓரணியில் கைகோர்த்து, அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளனர் என அறியமுடிகின்றது.
அதன் நிமிர்த்தம், மைத்திரியின் ஆசீர்வாதத்துடன் சஜித் களமிறக்கப்படலாம் என அறியமுடிகின்றது.
அந்த காய்நகர்த்தலின் மற்றுமொரு அங்கமாக, ஜனாதிபதியின் சகோதர்களில் ஒருவரான டட்லி சிறிசேனவுக்கும், சஜித் பிரேமதாஸவுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று கொழும்பில்இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகின்றது.
கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டலொன்றில், தனி அறையிலேயே இவ்விருவருக்கும் இடையில், கடந்த 10 ஆம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகின்றது.
அன்றையதினமே, சஜித்துக்கும் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினருக்கும் இடையில், அலரிமாளிகையில், இரவு 10 மணிமுதல் 12 மணிவரையிலும் சந்திப்பு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.