web log free
June 24, 2026

ஐஸ்ஸுடன் இருவர் கைது


உலக முடிவை பார்வையிடுவதற்காக சென்றிருந்த இந்தியப் பிரஜைகளில் இருவரிடத்தில் ஐஸ் எனும் போதைப்பொருள் மீட்கப்பட்டதையடுத்து அவ்விருவரும் கைதுசெய்யப்பட்டு, பட்டிப்பொல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


அவர்களிடமிருந்து ஐஸ் எனும் போதைப்பொருள் 120 மில்லிகிராமும், மஜர்வானா எனும் போதைப்பொருள் 80 கிராமும் கைப்பற்றப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.


இந்தியாவில் மகாராஷ்ரா மாநிலத்திலிருந்து சுற்றுலா பயணிகளாக வருகைதந்திருந்த இளைஞர்கள் ஐவர், உலக முடிவை பார்வையிடுவதற்கு சென்றுள்ளனர். அதன் நுழைவாயிலில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே, மேற்படி போதைப்பொருட்கள் இருவரிடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. அதனையடுத்து அவ்விருவரும் கைதுசெய்யப்பட்டனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd