ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் சிறு கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையில் நேற்றிரவு முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றது.
அமைச்சர் மங்கள சமரவீரவின் கொழும்பிலுள்ள வீட்டிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இதில், அமைச்சர் சம்பிக்க ரணவக்க, அமைச்சர்களான மனோ கணேசன், திகாம்பரம், ரிஷாத் பதியூதீன், ஹக்கீம் அவருடன் நிஷாம் காரியப்பர், ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்களான மங்கள சமரவீர, மலிக் சமரவிக்ரம, ஏரான் விக்கிரமரத்ன ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
இந்த சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள், எடுக்கப்பட்ட தீர்மானங்களை எக்காரணம் கொண்டும், அம்பலப்படுத்துவதில்லை என அனைத்து தரப்பினரும் தீர்க்கமான முடிவை எடுத்துகொண்டனர்.