ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் புதிய கூட்டணியை அமைத்து, எதிர்வரும் தேர்தலில் களமிறங்குவதற்கு தீர்மானித்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த புதியக் கூட்டணியில், ஜனாதிபதி வேட்பாளராக ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷவை நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த புதிய கூட்டணிக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தன்னுடைய முழுமையான ஆதரவை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளார் என்றும் அறியமுடிகின்றது.
அது தொடர்பில் பலசுற்றுப் பேச்சுவார்த்தை, ஜனாதிபதியின் மகன் சிறிசேனவுக்கும், விஜயதாஸ ராஜபக்ஷவின் மகன் ரபித ராஜபக்ஷவுக்கும் இடையில் இடம்பெற்றுள்ளன என அந்தத் தகவல்கள் தெரிவித்தன.