கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மிக உயர்ந்த கோபுரமான தாமரைக் கோபுரத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று (16) திறந்துவைத்தார்.
அந்த கோபுரத்தின் பராமரிப்பு, அரச நிர்வன செயற்பாட்டுடன் தனியாருக்கு ஒப்படைக்கவுள்ளதாகவும், அதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை தான் சமர்ப்பிக்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கோபுரத்தின் அடிப்பகுதியில், இன்றும் நிறைவுச் செய்யாமல் பல வேலைகள் அப்படியே கிடக்கின்றன.
அதனை நிறைவுச் செய்வதற்கும் இன்னும் சில மாதங்கள் தங்களுக்குத் தேவையென நிர்மாணப்பணிகளில் ஈடுபட்டிருக்கும் சீன நிறுவனம் அறிவித்துள்ளது.
ஆகையால், தாமரைக் கோபுரத்துக்குள் சென்று பார்வையிடுவதற்கு இன்னும் இரண்டொரு மாதங்களுக்கு பொதுமக்களுக்கு இயலாது என்றும், முழுமையாகப் பூர்த்திச் செய்ததன் பின்னரே, அதனை பார்வையிடமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முழுமையான நிர்மாணப்பணிகள் நிறைவடைந்ததன் பின்னரே, பொதுமக்களாக பார்வையிடமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.