ஜனாதிபதித் தேர்தலை நிறுத்துவதற்கான இறுதி துருப்புச்சீட்டை பயன்படுத்துவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தயாராகிவருகிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று இடம்பெறும் வாராந்த அமைச்சரவைக் கூட்டத்திலேயே அந்த அமைச்சரவைப் பத்திரத்தை ரணில் சமர்பிக்கவுள்ளார் என அறியமுடிகின்றது.
ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சமர்பிக்கவுள்ளார் என அறியமுடிகின்றது.
இந்த நிலைமையை, நீதிமன்றத்துக்குச் கொண்டுச்சென்று, நீதிமன்ற நடவடிக்கையின் ஊடாக ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைப்பதற்கோ அல்லது ஜனாதிபதித் தேர்தலை தவிர்ப்பதற்கோ, ரணில் விக்கிரமசிங்க முயற்சிக்கின்றார் என்றும் அறியமுடிகின்றது.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவைத் தவிர, ஏனைய கட்சிகள், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளன.
அவ்வாறான நிலைமையில், ஏனையக் கட்சிகளும் பிரதமரின் இந்த யோசனைக்கு ஏகோபித்த ஆதரவைத் தெரிவித்தால், ஜனாதிபதித் தேர்தல் ஒத்திவைக்கப்படும் சாத்தியக் கூறுகள் இருக்கின்ற என தகவல்கள் தெரிவிக்கின்றன.