தேசிய போதைப் பொருள் ஒழிப்பு பாடசாலை வாரம் இன்று (21) தொடக்கம் 28 ஆம் திகதி வரை நாட்டில் உள்ள சகல பாடசாலைகளிலும் ஜனாதிபதி செயலகத்தினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதன் ஆரம்ப நிகழ்வு முல்லைத்தீவு வித்தியானந்த கல்லூரியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வுகளின் ஏற்பாடுகள் தொடர்பில் வடமாகாண ஆளுனர் சுரேன் ராகவன் சென்று நேரடியாக பார்வையிட்டதுடன், அவருடன் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா மற்றும் மாவட்ட அராசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் ஆகியோர் சென்றிருந்தனர்.
இதன் பின்னர் வடமாகாண ஆளுநர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில்,
”ஜனாதிபதி தலைமையில் பாடசாலை போதை எதிர்ப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஆரம்ப நிகழ்வு இன்று வள்ளுவர் சிலையின் நிழலில் நடைபெறவுள்ளது.
இந்தநாட்டில் போதைப்பொருள் விற்பனையும் பாவனையும் மட்டுமல்லாமல் போதைப்பொருளின் மையமாக இலங்கை மாறிக்கொண்டிருக்கின்றது என்ற கசப்பான உண்மையினை நாங்கள் உணர வேண்டும்.
அந்த உண்மைக்கு எதிராக பிள்ளைகளை பாதுகாத்துக் கொள்வதும் இளைஞரை பெரிய அபாயத்தில் இருந்து காப்பாற்றிக் கொள்வது எங்களின் அரசியல் கலாச்சார சமூக பொறுப்பாக இருக்கின்றது அதன் முதல் கட்டமாகததான் இன்று இந்த நிகழ்வு நடக்கின்றது.
வட மாணாத்தில் இருந்து தான் போதைப்பொருள் கடத்தப்படுகின்றது அல்லது நாட்டுக்குள் வருகின்றது என்ற குற்றச்சாட்டு காணப்படுகின்றது” என்றார்.