பயங்கரவாத தடுப்புச்சட்டத்தை கைவிட்டுவிட்டு, புதிய சட்டமூலமொன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது.
அதற்காக முன்வைக்கப்படும் சட்டமூலம், அமைச்சரவையில் நேற்று (17) சமர்ப்பிக்கப்பட்டது. அதற்கு அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.
“புதிய நம்பிக்கையற்ற சட்டம்” என்ற பெயரிலேயே இந்த சட்டமூலம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அமைச்சர்களான, திலக் மாரப்பன, சம்பிக்க ரணவக்க, தலதா அத்துகோரளை ஆகியோர் முன்வைத்த காரணங்களை அடிப்படையாக வைத்தே, இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.
கடந்த உயிர்த்த ஞாயிறுத்தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்கள அடுத்து, இந்தியா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளில் அமுலிலிருக்கும் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டே, இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடுப்புச்சட்டமூலம், பாராளுமன்றத்தில் இன்றைக்கு சில மாதங்களுக்கு முன்னர் சமர்பிக்கப்பட்டது. எனினும், அதற்கு கடுமையான எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டமையால், இந்த திருத்தச் சட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என அமைச்சரவையின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.