web log free
December 07, 2023

ஐ.தே.மு நாளை மாலை 6 மணிக்கு கூடும்

ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில், அடுத்தவாரம் அறிவிப்பு விடுக்கப்படும் என கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில், கட்சியின் பொதுச் செயலாளரான அமைச்சர் அகில விராஜ் காரியவசம் ஊடக அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.

இந்நிலையில், ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் பங்காளிகளுடன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாளை (19) முக்கிய சந்திப்பொன்றை நடத்தவுள்ளார்.

இந்த சந்திப்பு நாளை(19) மாலை 6 மணிக்கு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Last modified on Friday, 20 September 2019 00:53