web log free
December 07, 2023

ஐ.தே.கவில் பிளவு-புதிய அணி உருவானது

ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானதுடன், ஐக்கிய தேசியக் கட்சியின் மாற்று அணியென தம்மை அறிமுக்கப்படுத்திக் கொள்ளும் ஒரு பிரிவினர், கொழும்பில் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.

பச்சை நிறத்திலான எழுத்தில் எழுதப்பட்ட அந்த சுவரொட்டியில், ஆங்கிலம் சிங்களம் ஆகிய மொழிகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஐ.தே.கவின் மாற்று அணியான “தேசபபற்று ஐக்கிய தேசியக் கட்சி” என்றே எழுதப்பட்டுள்ளது.

அந்த சுவரொட்டிகளை கொழும்பில் பல இடங்களில் காணக்கூடியதாக உள்ளது. 

 

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் எழுந்திருக்கும் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படாத நிலையிலேயே இவ்வாறான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

Last modified on Saturday, 21 September 2019 12:33