web log free
December 05, 2023

வத்தளை தீயில் கருகியது ஆடையகம்

வத்தளையில் ஆடையகம் ஒன்றில் பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, தீயை தமது கட்டுப்பாட்டுக்ளுக்கு கொண்டுவருவதற்கு முயற்சித்து வருகின்றனர்.

கொழும்பிலிருந்து ஐந்து தீயணைப்பு வாகனங்கள் அங்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தீயினால், கொழும்பு – நீர்கொழும்பு வீதி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பயணிகள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு கேட்கப்பட்டுள்ளனர்.

தீ பரவியமைக்கான காரணம் இதுவரையிலும் கண்டறியப்பட்டவில்லை. இது தொடர்பிலான விசாரணைகளை வத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.