web log free
December 07, 2023

ரீ சேர்ட் அணிந்தவருக்கு 3,000 ரூபாய் தண்டம்

ரீசேட் அணிந்திருந்த சமையல் காரர் ஒருவருக்கு 3,000 ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

தம்புத்தேகம நீதவான் கே.ஏ.ரமிலா நதீஷானியே மேற்கண்டவாறு தண்டம் விதித்துள்ளார்.

தம்புத்தேகம, சமாதி விஹாரைக்கு அண்மையிலுள்ள ஹோட்டலில், சமையல்காரராக பணிபுரிந்தவருக்கே, இவ்வாறு தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. 

பாதுகாப்பான உடைகளை அணியாமல் சமையல் வேலைகளில் ஈடுபட்டிருந்தார் என அவருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

உணவு உற்பத்திச் செய்யும் சகல வர்த்தகர்கள் மற்றும் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கு சுகாதார வைத்திய அறிக்கை பெற்றுக்கொள்ளப்பட்டு, பாதுகாப்பான ஆடைகளை அணிந்து உணவு உற்பத்தியில் ஈடுபடுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. 

எனினும், அந்த ஆலோசனையை மீறினார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டவருகே, மேற்கண்டவாறு தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. 

 

Last modified on Friday, 20 September 2019 03:27