ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஜனாதிபதி வேட்பாளரை நியமிக்கும் நடவடிக்கைள் இன்னும் நிறைவடையவில்லை.
இதனால், கட்சிக்குள் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
கட்சியின் செயற்குழுவுக்கு புதிய முகங்களை இணைந்துகொள்ளும் நடவடிக்கைகளை ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்துள்ளார் என அறியமுடிகின்றது.
அப்படியானால், செயற்குழுவில் சஜித்துக்கான ஆதரவு குறைந்துவிடுமென அறியமுடிகின்றது.
தன்னால், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிடமுடியாமல் போய்விட்டால், மாற்று கட்சியொன்றின் ஊடாக சஜித் பிரேமதாஸ போட்டியிடவுள்ளதாக அறியமுடிகின்றது.
அதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் அறியமுடிகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களே கட்சிக்கு காரியாலயமொன்றை திறக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
அந்தக் காரியாலயம் கொழும்பு-2 இலேயே அமையப்படவுள்ளது.
ரணில் காய்நகர்த்தலில் சஜித் பிரேமதாஸ வெட்டுப்பட்டால்,
தனிவழியில் சென்று சஜித் பிரேமதாஸ போட்டியிடுவார் என்றும் பெரும்பாலும் வாழைப்பழ சின்னத்திலேயே களமிறங்குவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.