ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி கட்சியும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸ பெயரிடப்படவில்லை என்றால், ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணிகட்சியில் இணைந்து போட்டியிடுவார் என புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஐக்கிய தேசிய கட்சியில் வாய்ப்பு வழங்கவில்லை என்றால் மாற்று ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என சஜித்திற்கு நெருக்கமான தரப்பினர் சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக சஜித் கழுகு சின்னத்தில் போட்டியிடுவார் என பரவலாக பேசப்பட்டது. தற்போது வாழைப்பழ சின்னம் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
எனினும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கட்சியை விட்டு வெளியேறப் போவதில்லை என சஜித் பிரேமதாஸ தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாழைப்பழ சின்னத்திலான ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி ஊவா மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்னவின் தலைமையிலானது என்பது குறிப்பிடத்தக்கது.