நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற வானிலையை அடுத்து, மேற்கு, தெற்கு, சப்ரகமுவ மற்றும் மத்திய ஆகிய நான்கு மாகாணங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திடிர் அனர்த்தங்களுக்கு முகம் கொடுக்கும் வகையில், முப்படையினரும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
1. காலி, மாத்தறை, களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் மண்சரிவு அபாயம்
2.நில்வளா, கிங் கங்கைகளை அண்மித்த பிரதேசங்களில் சிறிய வெள்ளப்பெருக்கு
3. வெள்ளப்பெருக்கு அபாயம் அதிகம்
4. அனர்த்தமா 117க்கு அழைக்கவும்
5. சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாகாணங்களில் 200 மில்லிமீற்றர் மழை பெய்யும்
6. வடமேல், வடக்கு, ஊவா, கிழக்கு ஆகிய மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் மழையை எதிர்பார்க்கலாம்
7. நாளை 25ஆம் திகதி வரை நீடிக்குமென எதிர்பாரக்கப்பட்ட கடும் மழை, இம்மாதம் முழுவதும் நீடிக்கும் சாத்தியம்
8. காலி, மாத்தறையில் சகல பாடசாலைகளுக்கும் 25 வரை பூட்டப்பட்டது. எனினும், 27 வரை பூட்டப்படும் சாத்தியம்
9. இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மதிப்பீட்டு பணிகள் ஆரம்பம்
10. பாதிப்புகள் மதிப்பிடும் வரையிலும் 10 ஆயிரம் ரூபாய் நட்டஈட்டு தொகை