web log free
April 06, 2026

கையை மீண்டும் சுட்டது பால் பக்கட்

 இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை, இன்று (24) முதல் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் பால் பக்கட்டுகளின் விலை, ஓகஸ்ட் மாதம் 2ஆம் திகதியே அதிகரிக்கப்பட்டது. 53 நாட்களுக்குள் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்பிரகாரம் 400 கிராம் பால்மா பக்கட்டின் விலை 20 ரூபாயாலும் 1 கிலோகிராம் பால்மா பக்கட்டின் விலை 50 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது இந்நிலையில், 400 கிராம் பால்மா பக்கட்டின் புதிய விலை 380 ரூபாய், 1 கிலோகிராம் பால்மா பக்கட்டின் புதிய விலை, 985 ரூபாய் என, தாக, நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd