விஹாரையே இல்லாத இடத்தில், விஹாரையை கட்டி, பிள்ளையாரை அங்கிருந்து அகற்றுவதற்கு முயன்ற, கொழும்பு மேதாலங்கார கீர்த்தி தேரரின் பூதவுடலை, பிள்ளையார் கோவில் வளாகத்தில் எரித்தமையால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
1.புற்றுநோயினால் வௌ்ளிக்கிழமை தேரர் கொழும்பில் மரணமடைந்தார்.
2.இறந்தவரை முல்லைத்தீவுக்கு கொண்டு சென்று புதைக்க ஏற்பாடு.
3.பொலிஸாரும் படையினர் சூட்சுமமாக நடவடிக்கை எடுத்ததாக பொதுமக்கள் சந்தேகம்
4.முல்லைத்தீவு பொலிஸில் முறைப்பாடு, நீதிமன்றத்தை நாடினர்.
5.ஆலய வளாகத்தில் எரிக்கவோ, புதைக்கவே ஞாயிறுக்கிழமை இடைக்கால தடைவிதிப்பு
6.திங்கள் காலை 9:30க்கு தீர்ப்பளிப்பதாக நீதிமன்றம் அறிவித்தது.
7.நீதிமன்ற அவமதிப்பு குற்றத்தில் பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட ஞானசார தேரர், முல்லைத்தீவுக்கு விரைந்தார்.
8.தேரர்களை நீதிமன்றத்திலிருந்து வெளியேற்றிய நீதிமன்றம் தீர்ப்பை காலை 10 மணிவரைக்கும் ஒத்திவைத்தது.
9.தீர்ப்பு வழங்கப்படும் போது, தேரர்கள் எவரும் நீதிமன்றத்தில் இருக்கவில்லை.
10.பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் எரிக்கவோ புதைக்கவோ கூடாது. கடற்படை முகாமுக்கு அருகில் எரிக்குமாறு உத்தரவு
11.அதற்கு முன்னர், கோயிலுக்கு அருகிலேயே எரித்துவிட்டனர்.
12.இதனால் முறுகல் நிலை ஏற்பட்டது. கைகலப்பும் ஏற்பட்டது. சட்டத்தரணிகள் சிலரும் தாக்கப்பட்டனர்.
13.நீதிமன்ற தீர்ப்பு தாமதமானதால் எரித்துவிட்டோம் என்று பிக்குகள் விளக்கம்
14.நீதிமன்ற அவமதிப்பை எதிர்த்து வடக்கு கிழக்கில் சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டம்.
15.வடக்கு, கிழக்கில் நீதிமன்றங்கள் யாவும் முடங்கின.
16.முல்லைத்தீவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
17.கல்முனையில் கண்டன ஆர்ப்பாட்டம்
18.வழக்கு விசாரணைகள் யாவும் மற்றுமொரு நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டன
19.மலைய பிரதிதிகளும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
20.தங்களுடைய போராட்டத்தை வெள்ளிவரையிலும் நீடிப்பதாக சட்டத்தரணிகள் அறிவித்துள்ளனர்.
21.பிக்குகளுக்கு சோதனை என பிக்குகள் ஆவேசம்
22.ஞானசாரதேரரை கைதுசெய்யுமாறு கோரிக்கை