கடமையிலிருந்து இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த கடற்படையில் சேவையாற்றிய லெப்டினென்ட் யோசித்த ராஜபக்ஷ, மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார் என அறியமுடிகின்றது.
இவர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின், இரண்டாவது புதல்வர் ஆவார்.
ஜனாதிபதியின் அனுமதியுடன் 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி முதல், மீண்டும் சேவையில் அவர் இணைக்கப்பட்டுள்ளார் என அறியமுடிகின்றது.
லெப்டினென்ட் யோசித்த ராஜபக்ஷவை சேவையில் மீண்டும் இணைத்துகொள்வதற்கான கட்டளையில், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் டி சில்வா, நேற்று (24) கைச்சாத்திட்டுள்ளார் என்றும் அறியமுடிகின்றது.
கார்ல்டன் ஸ்போர்ட்ஸ் நெட்வேர்க, (சீ.எஸ்.என்) ரூபவாஹினி தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போதே, இவர் 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி முதல் பணியிலிருந்து இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.