யுத்தத்தின் போது அதில் பங்கேற்றிருந்த நேரத்தில், கிராமங்களுக்கு வந்து மனிதப் படுகொலைகளை மேற்கொண்டிருந்தார் அவர்கள் படைவீரன் அல்லர். அவர், மனித படுகாலையாளி. அவ்வாறான படுகொலையாளியை, நீதிமன்றத்தின் முன்னிறுத்தி, ஆகக் கூடிய தண்டனையை பெற்றுக்கொடுக்க வேண்டும் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ தெரிவித்தார்.
இந்த நாட்டில் படைவீரர்கள் 39 ஆயிரம் பேர் உள்ளனர். அவர்களில் 34 ஆயிரம் பேர் இராணுவத்தினர். 4400 பேர் கடற்படையினர். ஏனையோர் விமானப் படையினர் என்றும் பெர்ணான்டோ மேலும் தெரிவித்தார்.