ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாஸவின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்கான வியூகங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில், மாகாணங்கள், மாவட்டங்கள், பிரதேச சபைகள் உள்ளிட்டவைக்கு பொறுப்பானர்வர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இன்னும் சிலர், எதிர்காலத்தில் நியமிக்கப்படவுள்ளனர் என கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கு, கிழக்கில் தமிழ், முஸ்லிம் வாக்குகளை திரட்டும் பணியில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே, நேரடியாக களத்தில் குதிக்கவுள்ளார்.
வடக்கு, கிழக்கு பிரசார பணிகள், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நேரடி கண்காணிப்பின் கீழ் முன்னெடுக்கப்படும்.
1.நடவடிக்கை குழு பிரதமர் ரணில் தலைமையில், அமைச்சர்களான கபிர் ஹாசிம், அகில விராஜ் காரியவசம் ஆகியோர் அடங்குகின்றனர்.
2.உறுப்பினர்கள் அந்த நடவடிக்கை குழுவில், ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிகளான, ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியூதீன், மனோ கணேசன், ராஜித சேனாரத்ன, சம்பிக்க ரணவக்க ஆகியோர் அடங்குகின்றனர்.
3.மேல் மாகாணம்- அமைச்சர்களான ரவி, ராஜித
4.மேல் மாகாண பிரசாரம்- இராஜாங்க அமைச்சர்களான சுஜீவ, ஏரான் மற்றும் ஹர்ஷன ராஜகருணா எம்.பி
5.மத்திய மாகாணம்- அமைச்சர்களான லக்ஷ்மன் கிரியெல்ல, நவீன் திஸாநாயக்க.
6.கேகாலை- அமைச்சர் கபீர் ஹாசிம்
7.குருணாகல்- அமைச்சர் அகில விராஜ் காரியவசம்
8.காலி மாவட்டம்- அமைச்சர்களான வஜிர அபேவர்தன, கயந்த கருணாதிலக்க.
9.ஹம்பாந்தோட்ட- அமைச்சர் சஜித் தலைமையிலான குழு
குறிப்பு: நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் பிரசார நடவடிக்கைகளில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் அமைச்சர் சஜித் பிரேமதாஸவும் இணைந்துகொள்வார்.