கடந்த வாரம் 19ஆம் திகதி இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் கருத்துமோதல்கள் இடம்பெற்றன.
அன்றைய விசேட அமைச்சரவையில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பது தொடர்பில் ஆராயப்பட்டது. எனினும், எவ்விதமான இணக்கப்பாடும் எட்டகப்படவில்லை.
ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கான யோசனை, முன்வைக்கப்படுவது உசித்தமானது அல்ல என, சஜித் அணியினர் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர். பங்காளி கட்சிகளும் கடுமையான எதிர்ப்பை தெரிவித்திருந்தனர்.
சிறுபான்மை கட்சிகளும் சிறு கட்சிகளும் எதிர்த்தனர்.
இந்நிலையில், அந்த அமைச்சரவைக் கூட்டத்தை யார் கூட்டசொன்னது என்பது தொடர்பில் ஜனாதிபதிக்கும் ரணிலுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதங்கள் பகிரங்கமாகவே இடம்பெற்றன.
ஆடையை உடுத்திக்கொண்டுதான் ரணில் பேசுகின்றாரா? என ஜனாதிபதி மைத்திரி, மாத்தளையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது கேட்டுவிட்டார்.
மைத்திரியின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் கருத்துரைத்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பு முயற்சியிலிருந்து தான் ஒருபோதும் விலகமாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
இன்னிலையில், இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தை யார் கூட்டச் சொன்னது என்பது தொடர்பிலான விமர்சனங்களும் முன்வைக்கப்படலாம்.