ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் நியமனத்துக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ள அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் தன்னுடைய எம்.பி பதவியை இராஜினாமா செய்வதற்கு தீர்மானித்துள்ளார் என அறியமுடிகின்றது.
அவர், ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகி, ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கு ஆதரவு நல்க போகிறார் என அறியமுடிகின்றது.
அதுமட்டுமன்றி, அவர் தேசிய அமைப்பாளராக கடமையாற்றும், ஐக்கிய இடதுசாரி முன்னணியையும், ஜே.வி.பியின் வேட்பாளருக்கே ஆதரவளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார் என அறியமுடிகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடாக தேசியப் பட்டியல் எம்.பியாக நியமிக்கப்பட்ட ஜயம்பதி விக்ரமரத்னவே மேற்கண்ட முடிவை எடுத்துள்ளார்.
ஐக்கிய இடதுசாரி முன்னணியின் மத்தியக் குழு அண்மையில் கூடியது.
இதன்போதே, ஜே.வி.பியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கு ஆதரவளிப்பது என, தீர்மானிக்கப்பட்டது.
அதனடிப்படையிலேயே ஜயம்பதி விக்கிரமரத்ன மேற்கண்ட முடிவை எடுத்துள்ளார் என அறியமுடிகின்றது.