நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவு தமக்குத் தேவையில்லை என ஐக்கிய தேசியக் கட்சி திட்டவட்டமாகக் தெரிவித்துள்ளது.
தொண்டமானின் ஆதரவை பெற்றால், தமிழ் முற்போக்கு கூட்டணியின் எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டும் என்பதனால், இ.தொ.கா முன்வைத்திருந்த 32 அம்ச கோரிக்கையை ஐக்கிய தேசியக் கட்சி நிராகரித்து விடதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐ.தே.கவின் சிரேஷ்ட உறுப்பினர்களின் ஆலோசனையின் பேரிலேயே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது என அறியமுடிகின்றது.
ஆறுமுகன் தொண்டமானை நல்லாட்சி அரசாங்கத்துக்குள் உள்வாங்கிக் கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதெல்லாம். தமிழ் முற்போக்கு கூட்டணி கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.