இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்
இந்த தொலைபேசி உரையாடல் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமார் அரைமணிநேரம் இடம்பெற்ற இந்த தொலைபேசி உரையாடலின் போது, தமது 32 அம்ச கோரிக்கையை தொண்டமான் தெளிவுப்படுத்தியுள்ளார்.
அதற்கு, கோத்தாவிடமிருந்து உறுதியான பதில் எதுவும் கிடைக்கவில்லை என அறியமுடிகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சி அந்த 32 கோரிக்கையை முழுமையாக நிராகரித்து விட்டது. கோத்தாவும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் பதில் எதனையும் வழங்கவில்லை.
இதனால், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில், இ.தொ.கா விழிப்பிதுங்கி நிற்கிறது என அறியமுடிகின்றது.