' சுப்பர் மார்கெட்டிலி, காலவதியான புடிங்கை, சாப்பாட்டுக்கு எடுத்துக்கொண்டால், என்ன நடக்கும். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவும் காலவதியான புடிங், நாற்றமெடுக்கும், புழுக்கள் இருக்கும். அவ்வாறான புடிங்கை சாப்பிடுவதற்கு, யாரும் முன்வரமாட்டார்கள். எனினும், அந்த புடிங்கிக்கு பின்னால் இருப்பவர்களுக்கு, அந்த பழைய புடிங், இன்னும் இன்னும் சுவையானது என்றே நினைத்துகொண்டிருப்பார்கள்' என பிவித்துரு ஹெல உறுமயவின் தலைமையக கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியாலாளர் சந்திப்பில், நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில மேற்கண்டவாறு தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மீண்டும் அரசியலுக்குள் வருவதுபற்றிய உங்களுடைய அபிப்பிராயம் என்னவென ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.