அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகள் மீதான தாக்குதல் தொடர்பான புலனாய்வு விசாரணைகளுக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இடையூறு ஏற்படுத்தியுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இத தொடர்பில் பொலிஸ்மா அதிபரிடம் நாளைய தினம் முறைப்பாடு செய்யவுள்ளதாக சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.
அதன் தலைவர் சட்டத்தரணி சேனக பெரேரா ஊடகங்களுக்கு இதனை தெரிவித்துள்ளார்.
சிறைகைதிகள் மீது தாக்குதல் மேற்கொள்ள பயன்படுத்தப்பட்ட தடிகளை, விசாரணைகளை முன்னெடுத்த மனித உரிமைகள் ஆணைக்குழு, கொழும்பிலுள்ள அதன் அலுவலகத்துக்கு கொண்டு வந்துள்ளதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுக்கும் போது, சம்பவ இடத்திலிருந்து தடய பொருட்களை அகற்றியுள்ளதால் விசாரணை நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என, அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.