எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவை ஆதரவளிப்பதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஏகமனதாக தீர்மானித்துள்ளது.
அதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு, கொட்டகலையில் வைத்து, காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானால் இன்று அறிவிக்கப்பட்டது.
இந்த முடிவானது, காங்கிரஸின் தேசிய சபையினால் எடுக்கப்பட்டது என அறிவிக்கப்பட்ட போதிலும், கட்சிக்கு பலரும் முரண்பட்டுள்ளனர் என அறியமுடிகின்றது.
குறிப்பாக, ஊவா மாகாண முன்னாள் அமைச்சர் செந்தில் தொண்டமான், கோத்தாவை ஆதரிக்கும் முடிவுக்கு கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
எனினும், அந்த முடிவுக்கு, மத்திய மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் மருதபாண்டி ரமேஷ்வரன், முழுமையான ஆதரவை நல்கியுள்ளார்.
இருவருக்கும் இடையிலான இந்த கருத்து வேறுபாடு, காங்கிரஸூக்குள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன என அறியமுடிகின்றது.