web log free
October 23, 2024

சுமந்திரனுக்கு காது கிழிய கொடுத்தனர் ராஜபக்ஷர்கள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன், ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவுடன் கொழும்பில் நடாத்திய பேச்சுவார்த்தை எவ்விதப் பலனுமற்றுப்போனது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிடுகிறார்கள்.

இந்தப் பேச்சுவார்த்தையில் வடக்கு கிழக்கு பிரச்சினை விடயத்தில் கோத்தபாயவின் நிலைப்பாடு என்னவென்றும், இதற்கான தீர்வை வழங்குகின்ற தீர்வு என்ன என்றும் கேட்டபோது, இந்தப் பேச்சுவார்த்தையின்போது கலந்துகொண்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ குறுக்கிட்டு 'வடக்கு கிழக்கு மக்களுக்குள்ள பிரச்சினையை விடவும் பாரிய பிரச்சினை தெற்கில் உள்ள மக்களுக்கு இருக்கிறது' எனக் குறிப்பிட்டார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிடுகிறார்கள்.

வடக்கு கிழக்கு மக்களும் தெற்கிலுள்ள மக்களும் முகங்கொடுக்க வேண்டிய பிரச்சினைகள் ஒன்று போலவே இருக்கின்றன எனவும் அப்பேச்சுவார்த்தையின்போது கோத்தபாய ராஜபக்ஷவும் மகிந்த ராஜபக்ஷவும் குறிப்பிட்டுள்ளனர்.