காவத்தை- கொட்டகெத்தன இரட்டை படுகொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்டிருந்தவரை குற்றவாளியாக இனங்கண்ட, கொழும்பு மேல் நீதிமன்றம், அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
2012 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட நயனா நில்மினி, அவரது மகள் காவிந்தியா சத்துரங்கி ஆகியோர் தொடர்பிலான வழக்கின் தீர்ப்பு இன்று (15) வழங்கப்பட்டது.
வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த ஹேவாகே தர்ஷன என்பவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம், மரண தண்டனை தீர்ப்பளித்துள்ளது.
பிரதிவாதியின் கூண்டிலிருந்த அவர், கண்ணீர் சிந்திவிட்டார்.
கொலைகளை நேரில் கண்ட சாட்சிகள் இல்லாத நிலையில், சான்றுப் பொருட்களை பயன்படுத்தி, முறைப்பாட்டு தரப்பு குற்றத்தை நிரூபித்துள்ளதாக, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விகும் களுஆராச்சி தீர்ப்பளித்தார்.
தீர்ப்பு வாசிக்கப்பட்டபோது, நீதிமன்றத்தின் அந்த அறையானது கடும் அமைதியடைந்திருந்தது. ஜனாதிபதியால் தீர்மானிக்கும் நாளன்று, குற்றவாளியின் மூச்சு நிற்கும் வரையிலும் தூக்கிலிடுமாறும் அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது