ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஓய்வுப் பெற்றதன் பின்னர், தற்போது அவர் பயன்படுத்துகின்ற உத்தியோகபூர்வ இல்லத்தை அவருக்கே வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.
கொழும்பு-7 மஹகமசேகர மாவத்தையிலுள்ள உத்தியோகபூர்வ இல்லமே அவருக்கு வழங்கப்படவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (15) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே அதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஓய்வுபெறும் ஜனாதிபதிக்கு சட்டரீதியாக வழங்கப்படவேண்டிய சகல வரபிரசாரதங்களுக்கு மேலதிகமாகவே இது வழங்கப்படவுள்ளது.
அதுமட்டுமன்றி, மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்புக்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையை வழங்குவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி, இந்த நாட்டில் போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுத்தவர் எ்ன்பதனால், அவருடைய மேலதிக பாதுகாப்புக்கே, விசேட அதிரடிப்படையினர் வழங்கப்படவுள்ளனர்.