web log free
July 01, 2025

மஹிந்தவின் முக்கிய புள்ளி சஜித்துடன் இணைவார்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் முக்கிய புள்ளியாகவும், மஹிந்தவுக்கு மட்டுமன்றி, கோத்தாபய ராஜபக்ஷவுக்கும் மிக நெருக்கமானவராக இருந்தவர்களில் ஒருவர், ஐக்கிய தேசிய முன்னணியில் இணையவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர், புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளிக்கும் நோக்கிலேயே அதில் இணைந்துகொள்ளவுள்ளார்.

இவர், மஹிந்தவின் அரசாங்கத்தில் முக்கிய பதவிகளை வகிக்காவிடினும் புதிதாக உருவாக்கப்பட்ட கண்காணிப்பு எம்.பியாக கடமையாற்றியிருந்தார்.

பாதுகாப்பு அமைச்சின் கண்காணிப்பு எம்.பியாகவே அவர் பதவிவகித்தார்.

இந்நிலையில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவே, இவ்வாறு இணைந்துகொள்ளவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

சஜின் வாஸ் குணவர்தனவுக்கு எதிராக, நீதிமன்றங்களில் பல்வேறான வழக்குகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனமை குறிப்பிடத்தக்கது. 

Last modified on Wednesday, 16 October 2019 03:34
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd