சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் மனைவி சுஜாதா சேனாரத்ன, எதிர்க்கட்சித் தலைவரும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சந்திப்பின் போது, தன்னுடைய கணவனை, பொதுஜன பெரமுனவில் சேர்ந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார் என அறியமுடிகின்றது.
பொதுஜன பெரமுனவுடன் தன்னை இணைத்துக்கொள்ளுமாறு இதற்கு முன்னர் ராஜித்த சேனாரத்ன கோரிக்கை விடுத்திருந்த போதிலும், பெரமுனவைச் சேர்ந்த பெரும்பான்மையான உறுப்பினர்கள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில், புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தோல்வியடைவார் என்பதை உணர்ந்துகொண்ட ராஜித்த, அரசியல் கரணமடிக்கும் தன்னுடைய முயற்சியை இன்னும் கைவிடவில்லை என அந்தத் தகவல்கள் தெரிவித்தன.