எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிட்டாலும், மூவர் தொடர்பிலேயே வெகுவாக பேசப்படுகின்றது.
ஜனாதிபதி வேட்பாளர்களான சஜித் பிரேமதாஸ, கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் தொடர்பிலேயே பேசப்படுகின்றது.
இதில், தன்னுடைய ஊடகப் பேச்சாளர்களாக கோத்தாவும், சஜித்தும் பிரதிநிதிகளை நியமித்துள்ளனர்.
கோத்தாபய ராஜபக்ஷவின் சார்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, நாடாளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழகபெரும மற்றும் கெஹலிய ரம்புக்வெல ஆகிய இருவரையும் நியமித்திருந்தது.
இந்நிலையில், புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் ஊடகப் பேச்சாளர்களாக அமைச்சர் மங்கள சமரவீர, பிரதியமைச்சர்களான சுஜீவ சேனசிங்க மற்றும் நளீன் பண்டார ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க, தனக்கு ஊடகப் பேச்சாளர் எவரையும் நியமித்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.