இணையத்தளங்களின் ஊடாக விளம்பரம் செய்து, ஓடர்களை பெற்றுக்கொண்டதன் பின்னர், சொகுசு வாகனத்தின் மூலமாக, விபசாரத்தில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில, தாய்லாந்து பெண்கள் இருவர் உட்பட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
வௌ்ளவத்தை குற்ற ஒழிப்பு பிரிவு பொலிஸ் குழுவினால் இவர்கள் இன்று அதிகாலை கைதுசெய்யப்பட்டனர்.
இந்த நடமாடும் விபசாரத்தை வழிநடத்தும் முகாமையாளர் நுகேகொடையை வசிப்பிடமாகக் கொண்டவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
வாடிக்கையாளர் போல, இணையத்தளத்தில் விளம்பரம் செய்த பொலிஸார், பதில் கிடைத்தவுடன், வௌ்ளவத்தை பிரதேசத்துக்கு வாகனத்தை எடுத்துவருமாறு கோரியுள்ளனர்.
அதனடிப்படையில், அவ்விடத்தில் மறைந்திருந்த பொலிஸார், வாகனத்தை மடக்கிப்பிடித்து, முகாமையாளர் உள்ளிட்ட தாய்லாந்து பெண்கள் இருவரையும் கைதுசெய்தனர்.
சந்தேகநபர்களான அந்தப் பெண்கள் இருவரும் விளம்பரமொன்றின் ஊடாக, தங்களிடவரும் வாடிக்கையாளர்களிடம் 10 ஆயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரையிலும் வசூலிக்கின்றனர் என பொலிஸார் தெரிவித்தார்.
தாய்லாந்து பெண்கள் இருவரும், 26 மற்றும் 34 வயதுகளை உடையவர்கள் என்றும், சுற்றுலா விசாவில் வருகைதந்தே, விபசாரத்தில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றமை விசாரணைகளிலிருந்து கண்டறியப்பட்டுள்ளது.