பாராளுமன்றத்தில் நான்கு எம்.பிகள் கடந்த இரண்டு வருடங்களாக ஒரு வசனம் கூட பேசாமல் இருந்துள்ளனர்.
அவர்கள் பாராளுமன்றத்துக்கு வந்து ஏனைய சுகபோகங்களை அனுபவித்துவந்துள்ளனர்.
அவர்கள், சிற்றுண்டிச்சாலை உணவகத்தை பயன்படுத்தியுள்ளனர். மருந்தகத்தில் பெறுமதிமிக்க மருந்துகளை கொள்வனவுச் செய்துள்ளனர் என அறியமுடிகின்றது.
பாராளுமன்ற உறுப்பினர்களில் 77 பேர் கடந்த மூன்று வருடங்களில் அமைச்சர்களிடம் ஒரு கேள்வியேனும் கேட்கவில்லை.
2017 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையிலும் நடைபெற்ற விவாதங்களில், மேலே குறிப்பிட்ட பராளுமன்ற உறுப்பினர்கள் நால்வர் எந்தவொரு வசனத்தையும் பேசவே இல்லை.
10 தடவைகளுக்கு குறைந்து பேசிய உறுப்பினர்களின் எண்ணிக்கை 10 பேர் ஆவர்.
இதேவேளை, 2017 ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டுக்கு இடையிலான காலப்பகுதியில், கோரமின்மையால் பாராளுமன்றம் மூன்று தடவைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.