முக்கிய அமைச்சர் ஒருவர், அமைச்சிலுள்ள தனது காரியாலயத்தில் மூச்சை மூட்டைகளை கட்டிக்கொண்டு, தனிப்பட்ட கோவைகளையும் அப்புறப்பத்தி எடுத்துச் சென்றுவிட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த சில நாட்களில் கொஞ்சம், கொஞ்சமாக தன்னுடைய ஆவணங்களை எடுத்துச் சென்றுவிட்டார் என அந்தத் தகவல்கள் தெரிவித்தன.
எதிர்க்கட்சி ஆதரவளிப்பதற்கு தீர்மானித்துள்ள அமைச்சர் ஒருவரே இவ்வாறு தீர்மானித்துள்ளார் என அறியமுடிகின்றது.
தெற்கை சேர்ந்த அந்த அமைச்சர், புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கும் அவருடைய அணிக்கும் மிகவும் நெருக்கமானவர் ஆவார்.
எனினும், கருத்துமோதல்கள் காரணமாக, எதிரணிக்கு மாறுவதற்கு தீர்மானித்துள்ளார் என அறியமுடிகின்றது.
அந்த அமைச்சரை தம்முடன் இணைத்துகொள்வதற்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் விரும்பவில்லை.
எனினும், ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்துக்கு எதிரணிக்கு ஓர் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதற்கும் மக்கள் செல்வாக்கை கூட்டிக்கொள்ளவும் அந்த அமைச்சரை ஏற்றுக்கொள்வோம் என மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார் என அறியமுடிக்கின்றது.
அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் தங்களுக்கு பங்கம் ஏற்படாதவகையில், காய்நகர்த்தலை மேற்கொள்ளுமாறு, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் மஹிந்தவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர் என்றும் அறியமுடிகின்றது.