பாராளுமன்றம் இன்றுக்காலை 10.30க்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடும்.
அதன்பின்னர், ஜனவரி 1 ஆம் திகதிமுதல் ஏப்ரல் 30ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்கு, அரசாங்க செலவுக்காக, 757 பில்லியன் 683 மில்லியன் 661 ஆயிரம் ரூபாய் (757,683,661,000) கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்படும்.
அதன் மீது இன்றுமாலை 6 மணிவரையிலும் விவாதம் நடத்தப்படவுள்ளது.
பின்னர் பாராளுமன்றம் நவம்பர் 7ஆம் திகதி வரைக்கும் ஒத்திவைக்கப்படும்.