உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குண்டுதாரியுடன் தொடர்புள்ள அமைச்சர் ஹக்கீமும் விசேட தெரிவுக்குழு உறுப்பினராக இருந்துள்ளார்.
இது தொடர்பான அறிக்கையை எவ்வாறு ஏற்க முடியும் என ஐ.ம.சு.முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன கேள்வியெழுப்பினார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராயும் விசேட பாராளுமன்ற குழுவின் அறிக்கை நேற்று சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. இதன்போது ஒழுங்குப் பிரச்சினையொன்றை முன் வைத்த அவர் மேலும் கூறியதாவது,
உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுதாரியான சஹ்ரானை தெரிவுக்குழு உறுப்பினர் ஹக்கீம் சந்தித்துள்ளார்.
ஆனால் அவர் இந்த தாக்குதல் தொடர்பான குழுவில் இருக்கிறார்.
பக்கச்சார்பற்ற விசாரணைகளுக்கு குந்தகமாக உள்ளது. இது ரவூப் ஹக்கீம் தொடர்பான பிரச்சினை மட்டுமல்ல முழு பாராளுமன்றத்தினதும் பிரச்சினையாகும்.
சந்தேகத்திற்கிடமான நபர்களை தெரிவுக்குழு உறுப்பினர் ஹக்கீம் சந்தித்திருப்பது தெரிவுக் குழுவின் பக்கச்சார்பற்ற செயற்பாட்டை பாதிக்கிறது.
சந்தேகத்திற்கிடமான நபர்களுடனான தொடர்பு பற்றி அவர் சபாநாயரை அறிவூட்டாது தெரிவுக் குழு அங்கத்தவராக இருந்துள்ளார்.