மட்டக்களப்பு பல்கலைக்கழக (பெற்றி கம்பஸ்) விவகாரத்திலிருந்து தப்புவதற்காகவே கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ளதாக ஆளும் தரப்புப் பாராளுமன்ற உறுப்பினர் ஆசூ மாரசிங்க தெரிவித்தார்.
பெற்றி கம்பஸை ஹிஸ்புல்லாஹ் என்ற தனிமனிதர் வழிநடத்திச்செல்ல முடியாது என்பதை நன்கு தெரிந்துகொண்டதன் காரணமாகவே ஜனாதிபதி தேர்தல் மூலம் அவர் பாதுகாப்புத் தேடும் செயலில் இறங்கியுள்ளார் எனவும் குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகம் ஸ்ரீகொத்தாவில் நேற்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைத் கூறினார்.
மேலும் கூறுகையில்,
ஹிஸ்புல்லாஹ் நன்கு தெரிந்த நிலையில் தான் இந்த புதிய முயற்சியில் இறங்கியுள்ளார். அவர் கிழக்கு மாகாண மக்களை
ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பல்கலைக்கழகம் போன்ற உயர் நிறுவனத்தை சுயமாக ஆரம்பிக்க முடியாது மானியங்கள் ஆணைக்குழுவுடன் உடன்படிக்கை செய்யவும் முடியாது. அவ்வாறு செய்வது சட்டத்துக்கு முரணானதாகும். இதன் காரணமாக அவரது செயற்பாடுகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் முழு அளவிலான விசாரணை நடத்தி தீர்வுகாணுமாறு நாம் பாராளுமன்ற சபாநாயகரிடம் கேட்டிருக்கின்றோம். நீதி நிலைநாட்டப்படும் என நாம் நம்புகின்றோம். பெற்றி கம்பஸ் விவகாரம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டுமென்பதில் தாம் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றோம். ஜனாதிபதி தேர்தலை தனக்கு சாதகமாக பயன்படுத்தி இப் பிரச்சினையிலிருந்து தப்புவதற்கு ஹிஸ்புல்லாஹ் முனைகின்றார். ஜனாதிபதி தேர்தலில் அவர் போட்டியிட களமிறங்கி இருப்பது சமுதாய நலனைக் கருத்தில் கொண்டதல்ல என்றார்.